OTT-யில் அடுத்த 100 படங்கள் ரிலீஸ்..



தியேட்டர்களுக்கு மூடுவிழா தொடங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை மிக விரைவிலேயே நடக்கப்போகிறது. ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இந்தப் பத்து பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை காலம்தான் சினிமா தியேட்டர்களை ஓட்ட முடியும்.

இதில் அந்த 10 பேரும் வருடத்திற்கு ஒரு படங்கள் நடிக்கிறார்கள். இதில் ஒரு சிலர் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கிறார்கள். அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 10 படங்கள் மட்டும் தான் தியேட்டருக்கு வருகிறது. பத்து படங்களை வைத்துக் கொண்டு சினிமா தியேட்டரில் ஓட்டுவது மிகவும் கடினம்.
அந்த பத்து படங்களும் நன்றாக நல்ல படமாக இருந்தாலும் ஒரு வாரம் மட்டுமே ஓடுகின்றன. அப்படி அதையும் மீறி ஒரு சில படங்கள் நன்றாக இருந்தால் பத்து பதினைந்து நாட்கள் ஓடும். அப்படியில்லையென்றால் அடுத்தபடியாக 3d படங்கள் 6d, 7d என இசைக்கு,காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து டெக்னாலஜியை அதிகமாக சேர்த்துக் கொண்டு படமெடுத்து வெளியிடுவார்கள். அதனை வீட்டிலோ செல்போனிலோ படத்தைப் பார்த்தால் ரசிக்கும்படியாக இருக்காது

எனவே அவர்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் ஏகப்பட்ட பட்ஜெட் வேண்டும் படம் சரியில்லை என்றால் தியேட்டர் காத்து வாங்கும். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளுக்கு மத்தியில் தியேட்டர்கள் இனிமேல் இயங்குவது என்பது கேள்விக்குறி தான். இதை அறிந்த சில தியேட்டர்காரர்கள் இழுத்து மூடிவிட்டு காம்ப்ளக்ஸ், அப்பார்ட்மென்ட் கட்டி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் கொரோனா போன்று புதிதாக இறங்கிய OTT பிளாட்பார்ம் தான். ஹாலிவுட் பாலிவுட்டில் OTT-க்கு என்றே தனியாகப் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால் நாம் தியேட்டருக்கு படம் எடுத்துவிட்டு தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் போராடி வேறு வழியில்லாமல் OTT-இல் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்

இப்படி இதுவரை 200, 300 படங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அதில் ஒரு நூறு படங்கள் வெளி வருகிறது. இந்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மதிக்காமல் தியேட்டர்கள்காரர்கள் இவர்களை ஓடவிட்டு அலைய விட்டு படாதபாடு படுத்தி விட்டார்கள். அதனால் நல்ல விலைக்கு OTT-யில் வருவதால் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த 100 படங்களும் ஓரளவு லாபம் அல்லது பாதி பணம் கிடைத்தாலே அவர்களுக்கு வெற்றிதான். ஒரு சில படங்கள் 50, 60 லட்சத்தில் படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக OTT-இல் ரிலீஸ் செய்யலாம் படம் நன்றாக இருந்தால் பேரும் கிடைக்கும் பணமும் கிடைக்கும்.
அதெப்படி, தியேட்டர் டிக்கெட் விலை 150, பாப்கார்ன் 100, கூல் ட்ரிங்க்ஸ் 100, தண்ணி பாட்டில் 50. புதுசா ஒருத்தன் படம் எடுத்து ரிலீஸ் பண்ண வந்தா அவன மதிக்கறதே இல்ல அப்படி கெஞ்சுனா ஒரே ஒரு ஷோ மட்டும் ரிலீஸ் செய்றது. அடங்கப்பா ஆட்டமா ஆடுனீங்க வச்சான் ஒரேடியா ஆப்பு.

About Cinewoods

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.