பிரகாஷ்ராஜ் மீண்டும் கால்ஷீட் பிரச்னை



தமிழ், தெலுங்கு படங்களில் பிரகாஷ்ராஜின் கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த பிரகாஷ் ராஜ், இந்தியில் சல்மான்கான் நடித்த வான்டட் படம் மூலம் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடிக்கிறார். இப்போது பாலிவுட்டிலும் நம்பர் ஒன் வில்லன் நடிகராக பிரகாஷ்ராஜ் உள்ளார். பாலிவுட் படங்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதால் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட தமிழ், தெலுங்கு படங்களுக்கு அவர் கால்ஷீட் பிரச்னை செய்கிறாராம். இதனால் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் பாதித்துள்ளது. அவரே நடித்து, இயக்கும் உன் சமையல் அறையில் பட ஷூட்டிங்கும் அரைகுறையாக நிற்கிறது. இதன்காரணமாக அஜீத், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பிரகாஷ்ராஜ் என்றாலே அலறுகிறார்கள். அவரால் படம் லேட்டாகும் என்பதால் வேறு வில்லன் நடிகர்களுக்கு இயக்குனர்கள் வலை வீசுகிறார்கள்.

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment